3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றம்..!!

Job Recruitment / Trend News

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றம்..!!

💥 தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

💥 வருகின்ற மார்ச் மாதம் பாரளுமன்ற தேர்தல் நடைபெற்ற இருக்கின்றது.இந்நிலையில் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

💥 இதனிடையே, மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.

💥 அதன் ஒருபகுதியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும்.

💥 மேலும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

💥 எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

💥 இந்நிலையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

💥 ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும், இடமாற்றம் செய்து அதற்கான அறிக்கையை வருகிற 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.