ஜெர்மனி, சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு!!!

Job Recruitment / Trend News

ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு.!

💥 நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது மாநில அளவில் நடைபெறும் அரசு பொதுத் தேர்வுகளில் அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பிடிப்பதுதான்.

💥 தற்போது கால்பந்து விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வென்று நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.

💥 சென்னையில் நடைபெற்ற கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் சென்னைக் குழுவை வெற்றி கொண்டுள்ளனர்.


💥 கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வென்ற நாமக்கல் பள்ளி மாணவிகள் ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளனர்.

💥 அதிகப்பட்சமாக ஆண்கள் பிரிவில் மட்டும் 64 பள்ளிகளின் குழுக்கள் பங்கேற்றன. இதில் 32 பெண்கள் குழுவினரும் பங்கேற்றனர். இறுதிச் சுற்றான 4-வது சுற்றின்போது நாமக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் கோப்பையை வென்றனர்.


💥 ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளவர்கள் அனைவருமே பொருளாதார ரீதியாக சமுகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவிகள்.

💥 எனவே அவர்களுக்கான பயணச் செலவுகள் முழுவதையும் சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்கிறது.

💥 இப்பயிற்சி முகாம் மூலம் அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று கதே இன்ஸ்டிடியூட் துணை இயக்குநர் தெரிவித்தார்.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.