TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 08) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 கேரளா, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை கண்காணிக்கும் “விலை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவை” உருவாக்கியுள்ள முதல் மாநிலமாகும். 🌀 இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா கிராமமாக உருவாக்கிட, மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் “தர்வாஷா பாண்ட் – பகுதி 2” (Darwaza Band – Part 2) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

🌀 30 ஆண்டுகளுக்கு பிறகு, தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறும் என, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் அறிவித்துள்ளது.

🌀 உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் 2018-ம் ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது.

🌀 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

🌀 அர்ஜெண்டினா நாட்டில் புதியவகை டைனோசரின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

🌀 டி-20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்னும் சாதனையை, இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

🌀 தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 சென்னை ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக (ICF General Manager) “இராகுல் ஜெயின்” நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 பாகிஸ்தான் இராணுவம் “நசர்” (NASR) என்ற குறுகிய வரம்புடைய (Short – Range) தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
🌀 அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இந்திராசென் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு அதிவேக முப்பரிமாண அச்சு இயந்திரமான, 30 – 120  நிமிடங்களில் அச்சிட்டு தரும், 3டி பிரின்டரை உருவாக்கியுள்ளது. 

🌀 சுவிட்சர்லாந்திலுள்ள, ‘கிளைம் வொர்க்ஸ்’ நிறுவனம், காற்றிலுள்ள கரியமில வாயுவை மட்டும் தனியே பிரித்தெடுக்கும், தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

🌀 வட மேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பூச்சு, இரும்பின் மேல் கீறல், விரிசல் ஏற்பட்டால் உடனே மூடிக்கொள்கிறது. இதனால் காற்று, நீர் போன்றவை பட்டு துரு உருவாகாமல் தடுக்க முடியும்.

🌀 எதிரிகளின் ராணுவ டாங்க்குகளை, ஹெலிகாப்டரில் இருந்து ஏவி தாக்கவல்ல, அதிநவீன, ‘ஹெலினா’ ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

🌀 வீடமைப்புத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, விருதுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

🌀 பாரம்பரியக் கலைகளை “இளைய கலைஞர்கள்” பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், புதுடெல்லியில் “2019 – சோபன்” என்ற 6 நாள் இசை மற்றும் நடனத் திருவிழா நடத்தப்பட்டது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.