குப்பையில் இருந்து மின்சாரம், புதிய திட்டம்!!!

Job Recruitment / Trend News

குப்பையில் இருந்து மின்சாரம் தாயாரிக்க ரூ.5,259 கோடியில் புதிய திட்டம்.!

💥 கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களைச் சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை ஏற்படுத்துவதற்காகவும் ரூ.5,259 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தம் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

💥 சென்னையில், அரசு – தனியார் பங்களிப்பு முறையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த, விரைவில் அனுமதி வழங்க உள்ளது.

💥 சென்னையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர் வளர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

💥 இத்திட்டத்துக்கு, வரும் நிதி ஆண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

💥 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

💥 எட்டு மண்டலங்களில், இரண்டு தொகுப்புகளாக இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.

💥 இதற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், 5,259 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.