தமிழக பட்ஜெட் 2019-20, முக்கிய அறிவிப்புகள்!!!

Job Recruitment / Trend News

2019 – 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை!!!

💥 2019-20ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

💥 இந்த பட்ஜெட்டில் 38 புதிய திட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

💥 ஏழை எளிய மக்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

💥 போலீசில் காலியாக உள்ள 9975 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

💥 பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலனை செய்யப்படும்.

💥 நவீனமயமாக்கும் திட்டம் உட்பட போலீஸ் துறைக்கு ரூ.8,884.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

💥 அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா தலங்களில் உணவகங்கள் விடுதிகள், போக்குவரத்தின் தரம் மேம்படுத்தப்படும்.

💥 மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும்.

💥 அண்ணா பல்கலை கல்லூரிகள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.

💥 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.

💥 ஹார்வர்டு பல்கலை போல் மற்ற சர்வதேச பல்கலைகளிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.

💥 தென் மாவட்டங்கள் மற்றும் நாகை போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர் மாநாடு வழி வகுத்து உள்ளது.

💥 முதலீடுகளுக்கு மானியம் வழங்க வரும் நிதி ஆண்டில் ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

💥 தமிழகத்தில் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

💥 இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டந்தோறும் மையங்கள்.

💥 தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும் மேலும் பல்வேறு அறிவிக்கப்பட்டு உள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.