128 ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு!!

💥 பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பணிக்கு முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

💥 2011 முதல், TET என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது.

💥 ஆசிரியர் பணியில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும் என, 2018 ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது.

💥 இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

💥 அந்த வகையில் 128 ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதல் முறையாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 அரசு தொடக்க பள்ளிகளில், பழங்குடியினத்தவருக்கான, 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

💥 ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி. வெளியிட்ட அறிவிப்பின்படி TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் நடைபெறும்.

💥 இதில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, 36 ஆயிரம் முதல், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

💥 காலிப்பணிடவிபரங்கள்: 1) B.T. Assistants – 116

2) Secondary Grade Assistants – 12

3) Post Graduate Assistants – 3

4) Special Teachers – 17

5) Assistant Professors – 4.

💥 இதில் சிறப்பாசிரியர் நியமனம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழங்குடியினர் பிரிவில், 17 சிறப்பு ஆசிரியர்கள், கள்ளர் சீர்திருத்த பள்ளிகளில், பட்டியல் இனத்தவருக்கான, நான்கு முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளது.

💥 மேலும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

💥 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.