TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 வயதுடையவர்களுக்கு லைசன்ஸ் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 🌀 தேசிய அளவில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

🌀 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 9.16 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சுமார் 5. 5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🌀 அம்ரீந்தர் சிங் (பஞ்சாப் முதல்வர்), பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் ஒரு அரிதான பாலூட்டியான, “சிந்து நதி டால்பின்களை” பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார்.

🌀 பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தைத் தீர்க்கும் கிளிபோசேட் (அமெரிக்காவின் மான்சான்டா நிறுவனத்தின் மருந்து) பூச்சிக் கொல்லி மருந்திற்கு, கேரள மாநில அரசானது தடை விதித்துள்ளது.

🌀 கேரளாவில், 1 லட்சம் மாணவர்களுக்கு, இலவச கண் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, கவர்னர், சதாசிவம் துவக்கி வைத்தார்.

🌀 தாய்லாந்தில் நடந்த பளுதுாக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

🌀 சர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பு, தெலுங்கானாவின் தலைநகரமும் முத்து நகரமுமான, ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.

🌀 அசாம் மாநில முதல்வர் சரபானந்தா சோனோவால் கௌஹாத்தியில், இரண்டாவது ஆசியான் இந்தியா இளைஞர் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

🌀 இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர், பிர­தீப் சிங் கரோலா, விமான போக்­கு­வ­ரத்து துறை செய­ல­ராக, பணி மாற்­றம் செய்­யப்­பட்­டுள்ளார்.

🌀 பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் ராஜேந்திர பிரசன்னா, கதக் நடனக் கலைஞர் சோபா கோஷெர் உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை வழங்கினார்.
🌀 சமூக நீதிக்கான “K. வீரமணி விருதானது” P.S கிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

🌀 பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும், பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

🌀 பூமியின் சராசரி வெப்பம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே, மிக அதிகபட்ச அளவு இருந்ததாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளன.

🌀 இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை, 3 அல்லது 4 ஆண்டுகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பதற்கான, புதிய தொழில் நுட்பத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியை, டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டுபிடித்துள்ளார்.

🌀 பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு, நேர்மறை தரக் குறியீட்டை மூடிஸ் வழங்கியுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.