TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 06) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான, “102 – தாய் – சேய் நல வாகன சேவை” திட்டத்தின் கீழ் 15 புதிய வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. 🌀 திருப்பூர் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி,  காணொலி காட்சி மூலம் சென்னையில் புதிய மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

🌀 கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும், 128 அரசு பள்ளிகளுக்கு, ‘புதுமை பள்ளி விருது’ வழங்க, மாநில – மாவட்ட அளவில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

🌀 கொல்கத்தாவிற்கு அருகே உள்ள மாயாபூரில், உலக பாரம்பரிய மையம் (WHC – World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது.

🌀 கூகுள் குரோமில் பாஸ்வேர்டை தவறாகப் பயன்படுத்த முற்பட்டால், உடனடியாகக் காட்டிக் கொடுக்கும் வசதி  அறிமுகமாகிறது.

🌀 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

🌀 இலங்கையில் கடந்த, 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தூக்கு தண்டனை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. 

🌀 மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, அர்ஜென்டினாவின் இந்தியத் தூதராக பணியாற்றி வரும், சஞ்சீவ் ரஞ்சன் என்பவரை, கொலம்பியக் குடியரசின் புதிய தூதராக நியமித்துள்ளது.

🌀 ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயூஷ் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில், நடைபெற உள்ளது.

🌀 விவசாயத்திற்கும் அதுசார்ந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வகையில், எவ்வித பிணையையும் இல்லாத, “கிசான் சுவிதா கடன்” என்ற திட்டத்தை உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி (Ujjivan Small Finance Bank) தொடங்கியுள்ளது.

🌀 விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டமான “கலியா சக்ரவிருதி யோஜனா” (Kalia Chhatravritti Yojana) என்னும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
🌀 இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், 42 கலைஞர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார்.

🌀 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர், அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

🌀 மாணவர்கள் தங்கள் கணினி அல்லது செல்பேசி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளும் வகையில் தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency), “NTA Students App” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

🌀 சென்னை வேப்பேரியில் DIGICOP என்ற மொபைல் செயலியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்துள்ளார்.  DIGICOP என்ற மொபைல் செயலி மூலம் திருடப்பட்ட இருசக்கர வாகனம், செல்போனை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🌀 சர்.சி.வி. ராமன் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், கேரட்டிலிருந்து சீரான லேசர் கதிரை (Random Laser Ray), சென்னை ஐ.ஐ.டி (Chennai – IIT) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

🌀 80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும், என அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழிற்கல்வி நிறுவன (MIT) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

🌀 இதயத்தின் இயக்க சக்தியைக் கொண்டே, பேஸ்மேக்கர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.