பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் திட்டம் அறிவிப்பு!!!

Job Recruitment / Trend News

தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!!!

💥 இந்த ஆண்டு, பிளஸ் 2 ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு, புதிய முறையில் தேர்வு நடத்தப்படும்.

💥 1,200 மதிப்பெண் முறையில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் ,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

💥 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத, தனி தேர்வர்களாக விண்ணப்பிக்காதோர், தட்கல் திட்டத்தில், கூடுதலாக, 1,000 ரூபாய் செலுத்தி, விண்ணப்பிக்கலாம்.💥 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன., 21, 22ம் தேதிகளில், தேர்வு துறை சேவை மையம் சென்று, ‘ஆன்லைன்’ வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

💥 ஏற்கனவே, 1,200 மதிப்பெண் முறையில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோர், வரும், மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும்.  

💥 அதற்கு பின், பழைய தேர்வு முறையில், தேர்வு எழுத முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

💥 இதுகுறித்த மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்க அரசு சேவை மையங்களை அறிந்து கொள்ள
www.dge.tn.gov. in என்ற இணை தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

💥 அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!