RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 11) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். 🌀 மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளின் உதவியுடன், கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து, விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.

🌀 தெற்காசியாவில் முதன்முறையாக, மதுரை கே.ஜி.எஸ், அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ, மற்றும் சிடி ஸ்கேன் நிறுவனத்தில், சோமோடாம் கோ.டாப் என்னும் அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி துவக்கி வைக்கப்பட்டது.

🌀 பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 13 முதல் 15 வரை நடைபெறுகிறது.

🌀 சமூக ஊடகங்களில் “மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை” அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “WEB WONDER WOMAN” என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

🌀 இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India’s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது, (BYORUNG – BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.

🌀 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., விலக்கிற்கான விற்றுமுதல் வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து, சிறு வணிகர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🌀 சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக, அமெரிக்கா இணைந்துள்ளது.
சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி, இரண்டாவது முறையாக வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ பொறுப்பேற்றார்.
🌀 மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான, சூ தசெங்-சாங்  தைவான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

🌀 ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக, M.K. ஹஞ்சுரா (M.K. Hanjura) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

🌀 ஹிந்து சமய அறநிலையத்துறை புதிய கமிஷனராக, பனீந்திரரெட்டி பொறுப்பேற்றார்.

🌀 குஜராத்தில் 9ஆவது உலக வர்த்தக மாநாட்டை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

🌀 உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 ) ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.

🌀 நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.