RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 10) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும், இந்தியாவில் ஒருமைப்பாடு ஏற்படுவதற்காகவும் அனைத்து மொழி கவிஞர்களும் பங்கேற்கும் ‘அகில பாரத கவி சம்மேளம்’ சென்னையில் நடைபெற்றது. 🌀 உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, UDAN-3 திட்டத்தின் கீழ் அந்தமான் தீவுகளில் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.

🌀 பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையானது, இந்திய வனப்பணியை (IFoS) இந்திய வனம் மற்றும் பழங்குடியினர் பணி (IFTS) என பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.

🌀 ஜம்மு & காஷ்மீரின் சட்டத் துறையானது, ஓய்வுபெற்ற நீதிபதி MK ஹனுஜுரா தலைமையிலான, மாநில சட்ட ஆணையத்தினை 3 ஆண்டு காலத்திற்கு அமைத்துள்ளது.

🌀 ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும், இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட, இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

🌀 சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவிகளின் முகங்களில் ஓவியம் வரையப்பட்ட நிகழ்வுக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.

🌀 தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்று, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது.

🌀 சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

🌀 இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம், சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்து சண்டை தரவரிசை பட்டியலில், முதல் இடம் பிடித்துள்ளார்.
🌀 வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது, குறிப்பிட்ட மற்றும் அறிவியல் முறையில் உள்நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.

🌀 ரிசர்வ் வங்கியானது நாட்டில் டிஜிட்டல் பண வழங்கீட்டு சூழலியலின் பாதுகாப்பை மேம்படுத்த பற்று, கடன் மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கு, அடையாள தகவல் முறையை அனுமதித்துள்ளது.

🌀 லிவர்பூலின் முகமது காலாவிற்கு இரண்டாவது முறையாக, 2018 ஆம் ஆண்டிற்கான ஆப்ரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது செனகலில் வழங்கப்பட்டது.

🌀 நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான, “TESS (Transiting Exoplanet Survey Satellite)”-ஆனது HD21749 என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749b என்று பெயரிடப்பட்ட, புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.

🌀 நட்சத்திரத்தை விழுங்கி சுருங்கிய கருந்துளை ஒன்றை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்து உள்ளது.

🌀 புவிசார் தொடர்புகளுக்கான  ஸோங்ஸிங் 2 டி (Zhongxing-2D) என பெயரிடப்பட்ட, புதிய செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.