RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகும். 🌀 புனேயில் உள்ள பலேவதி விளையாட்டு அரங்கில், 18 வெவ்வேறு பிரிவுகளில் பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 2-வது பதிப்பை மகாராஷ்டிரா நடத்தவுள்ளது.

🌀 அரசானது உலகளாவிய சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சிக்கலான பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக, இந்திய வேளாண்மையை மாற்றுதல் எனும் திட்டத்தினை, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.

🌀 செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் விமானங்களில், பயணியருக்கு தேவையான உணவை, இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல, ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

🌀 இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம், 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், மத்திய பா.ஜ, ஆட்சியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

🌀 அடுத்த மூன்று பத்தாண்டுகளில் இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில், வயதானவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும், என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

🌀 விமானத் தயாரிப்பு நிறுவனமான, நெக்ஸஸ் நிறுவனமும், மின்சாரத்தால் இயக்கப்படும் ஏர் டாக்ஸி முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

🌀 இந்திய தேசிய சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் தலைவரான, பிரணவ் R மேத்தா உலகளாவிய சூரிய ஒளிக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

🌀 சி.பி.ஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

🌀 பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற, 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில், ஆண்டு கண்காட்சி விருதானது (Exhibitor of the year award) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை (DRDO) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
🌀 ஆஸ்திரேலியாவைச் ரோசன் டோரோப் என்ற வைர நிறுவனம் ஒன்று, மாடல் அழகியின் உதட்டில், உலகின் விலை உயர்ந்த வைரம் பதித்த ‘லிப் ஆர்ட்’ செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.

🌀 ரிலையன்ஸ் ஜியோ தகவல் தொடர்பு நிறுவனமானது, கும்ப் ஜியோபோன் என்ற செயலியைத் தொடங்கியுள்ளது.

🌀 அறிவியலாளர்கள் ‘கம்பியில்லா குளறுபடியற்ற நரம்பு செயல்பாடு மாற்றக் கருவி (Wireless artifact-free neuro modulation device – WAND) எனும் பெயரிடப்பட்ட வலிப்பு மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

🌀 நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால், புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும்.

🌀 இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனமான, 1 HMCL மற்றும் BPCL, HPCL மற்றும் 10CL போன்ற முன்னணி எண்ணெய் நிறுவனங்களுக்கிடையே, FASTag முறையில் அவர்களின் குழாய்கள் மூலம் பெட்ரோலை விற்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

🌀 இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில், 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதில் பொருளாதாரத்தில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.