RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 08) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை ஆய்வு செய்த, பொதுத் துறை நிறுவனங்களின் மீதான ஆய்வு அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 🌀 இந்திய விமான நிலைய ஆணையமானது, 16 விமான நிலையங்களில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியாலான பொருட்களுக்கு, சமீபத்தில் தடை விதித்துள்ளது.

🌀 மஹாராஷ்டிராவில், 13 வயது சிறுவன், ஆர்ய மான் தாத்ரா எழுதிய, ‘ஸ்னோ பிளேக்ஸ்’ என்ற கவிதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.

🌀 கர்நாடக மாநிலம் பெங்களூரில், விமான நிலையத்துக்கு செல்லும் பெண் பயணியருக்கென, பெண் டிரைவர்கள் இயக்கும் வாடகைக் கார்கள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🌀 நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையில், 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

🌀 பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும், ஏடி ஏடி என்ற புதியவகை வாகனம் ஒன்றை, ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது.

🌀 டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 21 இடங்கள் உயர்ந்து 17-வது இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

🌀 தெலுங்கானாவை சேர்ந்த 17 வயது மாணவி, சர்ணிதா முதல் முறையே, காட் தேர்வில் 95.95% மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

🌀 மூத்த ஊடகவியலாளரான தினு ரன்தீவிற்கு அவரின் வாழ்நாள் முழுவதுமான, பத்திரிக்கைகளுக்கான பங்களிப்பிற்காக, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
🌀 சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில், முதல் பெண் பொருளாதார நிபுணராக, மைசூரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான திருநங்கை அப்ஸரா ரெட்டி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🌀 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில், இந்தியாவின் சணல் ஏற்றுமதி 24 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🌀 மக்களவை சமீபத்தில், புதுடெல்லி சர்வதேச நடுவர் தீர்ப்பாய மைய மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

🌀 பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த, முஸ்லிம் அல்லாதோருக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

🌀 குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர், காணாமல் போனோர் உள்ளிட்டோரை அடையாளம் காண, டி.என்.ஏ, எனப்படும், மரபணு சோதனை நடத்த அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.