RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே, லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப்பாதை பணியின் போது, பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. 🌀 வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.

🌀 அரசானது உலகளாவிய சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சிக்கலான பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக, இந்திய வேளாண்மையை மாற்றுதல் எனும் திட்டத்தினை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.

🌀 பழமையான முத்திரைகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட ஒடிசாவில், உள்ள பழமையான புத்தமதக் குடியேற்றப் பகுதியான லலித்கிரி, தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

🌀 பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

🌀 வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்குவா மாகாண அரசானது, பெஷாவரில் உள்ள பண்டைய இந்து சமய தளமான, பஞ்ச் தளத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

🌀 திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதாகக் கருதப்படும், கோல்டன் குளோப் விருது, போஹேமியான் ராப்சோடி திரைப்படம் (Bohemian Rhapsody) தட்டிச் சென்றது.

🌀 புதுதில்லியில் நடைபெற்ற பத்திரிக்கைத் துறையில் ராம்நாத் கோயங்கா நிபுணத்துவ விருதுகளின், 13-வது பதிப்பில் 2017ம் ஆண்டிற்கான அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் சிறந்த நிபுணத்துவத்திற்கான விருதுகளை, 18 பிரிவுகளில் 29 வெற்றியாளர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

🌀 சென்னை மியூசிக் அகாடெமியின் 13வது நாட்டிய விழாவில், பிரபல நாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயனுக்கு “நிருத்திய கலாநிதி விருது”வழங்கப்பட்டது.

🌀 இந்திய புலம்பெயர் மக்கள் மீது கவனத்தைக் கொண்ட, உலகலாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணையதளமாகிய “Remit 2 India’’- விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🌀 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் கடன் உதவி அளிப்பதற்கான, மிஷன் சக்தி மாநாடு ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது.

🌀 சூரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க,மகாராஷ்டிர மாநில அரசானது “அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா” (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

🌀 ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணையில் 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள் சமீபத்தில் முடிக்கப்பட்டன. இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது..

🌀 CAT நுழைவுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் படைத்து, உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார். 

🌀 ஆந்திரப் பிரதேச முதல்வர் சமீபத்தில், குப்பம் நகரில் சித்தூர் போலீசாரால் வடிவமைக்கப்பட்ட, பிராண ரக்சா இணையதள செயலியை வெளியிட்டார்.

🌀 கோவையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில், ‘police e eye’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.