300 கோடி டவுன்லோடுகளை கடந்த VLC ஆப்!!!

Job Recruitment / Trend News

300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்!!!

💥 பிரபல வீடியோ பிளேயர் வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும்.

💥 வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது.

💥 இந்த அரங்கில் பல்வேறு சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் கண்காணிக்கப்பட்டது.💥மென்பொருள்களில் ஒன்றான வி.எல்.சி. 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியில் ஏர்பிளே வசதி வழங்கப்படுகிறது.

💥 இந்த வசதி கொண்டு பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப்பிள் டி.வி.யில் ஸ்டிரீம் செய்து பார்த்து ரசிக்க முடியும்.

💥 சி.இ.எஸ். 2019 துவக்க நிகழ்வின் போது, வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. பின் 300 கோடி டவுன்லோடுகளை கடந்தது.

💥 ஆண்ட்ராய்டு வி.எல்.சி. செயலிக்கான ஏர்பிளே வசதி வி.எல்.சி. 4 பதிப்பில் வழங்கப்படும் என மூத்த டெவலப்பர்களில் ஒருவரான ஜீன் பாப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்தார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.