போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிக்க தடை!!!!

Job Recruitment / Trend News

போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிக்க தடை தமிழக அரசு!!!

💥 நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

💥 வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர்.

💥 வரும் 14ஆம் தேதி பொங்கல் திருவிழாதொடங்குகிறது. முதல் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 💥 ஆனால் இன்றைய சூழலை எடுத்துக் கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. 

💥 சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் உண்டாகின்றன.

💥 எனவே இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முன்தினம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. 

💥 போகிப் பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப் பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

💥 எனவே போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.