உலகின் உயரமான சிவலிங்கம்!!!

Job Recruitment / Trend News

உலகின் உயரமான சிவலிங்கம் குமரியில் சாதனை!!

💥 கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது.

💥 இந்த கோயில் வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

💥 இந்நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

💥 இந்த கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது.💥 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது.

💥 கணபதி உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் உள்ளது.

💥 மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலையுடன் கட்டப்பட்டு உள்ளது.

💥 தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. 

💥 இந்த நிகழ்ச்சியில் கேரள பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தச் சிலை வரும் மகா சிவராத்திரி அன்று திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.