மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறியும் புதிய மருத்துவ முறை!!!

Job Recruitment / Trend News

மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறிய புதிய மருத்துவம்!!

💥 இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள்.

💥 ரத்த அழுத்தமும், உடல் பருமன் பிரச்சினையும் பலரை பாதித்துள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

💥 மாரடைப்பு 2030-ம் ஆண்டில் 23 மில்லியன் ஆக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்..💥 மன அழுத்தத்தாலும் மாரடைப்பு உண்டாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு 20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர்.

💥 உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

💥 இந்நிலையில் 40 வயதிற்கு மேல் ஏற்படும் மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறியும் புதிய முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

💥 இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம், தற்போது அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் மருத்துவ முறையாக இது உள்ளது.

💥 எலக்ரோ கார்டியோகிராம் அதாவது இசிஜியுடன் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குறைந்த செலவில் மாரடைப்பு மற்றும் இதய செயலழிப்பை முதலிலேயே கண்டறிந்து தடுக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

💥 இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி கருதப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.