3 நாட்கள் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை!!!

Job Recruitment / Trend News

பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!!!

💥 சீனாவில் உள்ள பியூஜியன் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

💥 அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

💥 இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.💥 அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு இருக்கக்கூடாது என்பதற்காக இதயத்தில் உள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சையைத் செய்துள்ளனர்.

💥 அதன் பின் அவரின் இதயத்துடிப்பை சுமார் 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைத்து சாதனை செய்துள்ளனர்.

💥 இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணும் இப்போது நலமாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

💥 72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்திவைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் சாதனையாகக் கருதப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.