RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 06) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 விபத்து இல்லாத இரயில் பயணத்தை இலக்காகக் கொண்டு Mission Zero Accident என்ற திட்டத்தை, இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகிறது. 🌀 27-வது உலக புத்தக கண்காட்சியானது, புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.

🌀 தேசிய மனித உரிமைகள் ஆணையமானது, பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக, 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.

🌀 சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்” பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

🌀 விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும், உயர் பாதுகாப்புச் சோதனை அமைப்பை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

🌀 2019-ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index – CCPI) பட்டியலில், “ஸ்வீடன்” மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🌀 ஐ.நா பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக, பெல்ஜியம், டொமினியன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.

🌀 மலேசிய மன்னர் சுல்தான் முகமது (வயது 49), தனது பட்டத்தைத் துறந்ததாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🌀 டாடா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா – திவிஜ் ஷரண் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

🌀 44-வது “சர்வதேச விளம்பர சங்கத்தின் உலகளாவிய உச்சி மாநாடு” [44th global Summit of the international advertising association (IAA)] கொச்சியில் (கேரளா) நடைபெற்றது.

🌀 இந்திய மருந்து மற்றும் மருத்துவ மாநாடு – 2019, கர்நாடகத்தின் பெங்களுரில் நடைபெற்றது. (India Pharma – 2019) இம்மாநாடு இரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது.

🌀 சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு, சென்னையில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை, மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.

🌀 நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ராணா (Rana) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.

🌀 பா.ஜ, தேர்தல் அறிக்கை குழு தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.