நவீன மென்பொருள் பயன்பாடு அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!!!

Job Recruitment / Trend News

நவீன மென்பொருள் அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!!

💥 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம் பொது மக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, சிரமமின்றி செலுத்த, இந்த திட்டம் பெரிதும் உதவும்.

💥 இத்திட்டத்தில், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளும், மின்னணு பதிவேடுகளாக மாற்றப்படும்.

💥 இந்த மென்பொருளை பயன்படுத்துவதால், அரசின் வரவு செலவுகளை உடனடியாகவும், இதர விபரங்களை எளிமையாகவும் பெற முடியும்; அரசின் நிர்வாகம் மேம்படும்.💥 நிதித்துறை சார்பில், 289 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்தார்.

💥 அதன் அடிப்படையில், அவர்களின் சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, விடுப்பு மேலாண்மை மற்றும் இதர விபரங்களை, மிக விரைவாக, துல்லியமாக பராமரிக்க இயலும்.

💥 முதல் தொகுப்பாக, சேலம், தேனி உள்ளிட்ட, 14 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

💥 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம், இரண்டு தொகுப்புகளாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.