புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!!!

Job Recruitment / Trend News

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!!

💥 அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.

💥 இந்த டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளன.

💥இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது.💥 இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுகிறது. . இதன் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் இருப்பதும், நட்சத்திரத்திற்கு அருகாமையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

💥 எனவே உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது.

💥 இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது. எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துளார்.

💥 டி.இ.எஸ்.எஸ். விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.