9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப்!!!

Job Recruitment / Trend News

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!!!

💥 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-12-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

💥 அதன் பிறகு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

💥 பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. 💥 அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

💥 இதில் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

💥 அவர் வெளியிட்ட அறிவிப்பில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும்.

💥 தற்போது +1, +2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.

💥 கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.