ஜனவரி 21 முதல் LKG & UKG வகுப்புகள் துவக்கம்!!!

Job Recruitment / Trend News

ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும்!!!

💥 தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு. கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

💥 இந்நிலையில் ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

💥 அதன்பின் மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 💥 மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.

💥 மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது போல வரும் காலங்களில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று அவர் கூறினார்.

💥 கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

💥 முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் 21-ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.

💥 அதேபோல் ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.