ஒரே மாணவிக்காக இயங்கும் அரசுப்பள்ளி!!!

Job Recruitment / Trend News

ஒரு மாணவிக்காக இயங்கும் தமிழக அரசுப்பள்ளி!

💥கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே இயங்கி வருகிறது.

💥கடந்த 1956ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தப்பள்ளி.ஜோகிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்காக கைக்கொடுத்தது ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதான்.

💥 காலம் செல்லச்செல்ல, ஆங்கில மோகம் தனியார் பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்க, கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகளை மக்களே புறக்கணிக்க தொடங்கினர்.

💥 அதன் விளைவு, பெரிய ஜோகிப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வேகமாக சரியத்தொடங்கியது. 💥கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில், நடப்பு ஆண்டிலோ ஒரே ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு பெயரளவுக்கு இயங்கி வருகிறது.

💥 பள்ளியை நிர்வகிக்க ஒரு பெண் தலைமை ஆசிரியர், குழந்தைக்கு மதிய உணவு வழங்க ஒரு சத்துணவு ஊழியர் ஆகியோரும் பணியில் உள்ளனர்.

💥 இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரேகாவிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். ஆங்கில வழிக்கல்வி மீதுள்ள மோகத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

💥 மாணவி ஸ்ரீலேகா மட்டும் இந்தப் பள்ளியில் தற்போது 3ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளும் தனியாக படிக்க சிரமப்படுகிறாள், என்று கூறினார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.