உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கு தடை!!!

Job Recruitment / Trend News

உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கும் தடை,ஜூலை 1
முதல் அமல்!!

💥 தமிழக அரசு இந்த மாதம் 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமலுக்கு கொண்டு வந்தது. 

💥 இத்திட்டத்திற்கான நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் வணிகர்களும், மக்களும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தரத் துவங்கி விட்டனர்.

💥 இதுதொடர்பாக அரசு தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.💥மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்வோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

💥 தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு தகுந்த அளவில் எச்சரிக்கை செய்து, அதையும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

💥 இந்நிலையில் உணவு பொருட்களை செய்தித்தாள் காகிதத்தாள் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

💥 உணவு பொருட்களை செய்தித்தாள் காகிதத்தாள் மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும், என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாடு ஆணையம் எச்சரித்துள்ளது.

💥 மேலும் இதனை பின்பற்ற ஜுலை 1ம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது, முன்னர் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ள தமிழக அரசு அதனை தொடர்ந்து இந்த முறையையும் அமல் செய்துள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.