சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!!

Job Recruitment / Trend News

சென்னை காவல் துறையில் புதிய ரோபோ போலீஸ் அறிமுகம்

💥 சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது.

💥அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர்.

💥 சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

💥 காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில், பார்வையிட்டனர். 💥 போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றில் எந்த பிரிவில் ரோபோக்களை ஈடுபடுத்தலாம் என்பது குறித்து சோதனைகளுக்கு பிறகே முடிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

💥 இந்த ‘ரோபோ’ போலீஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக பார்வையிட்டார்.

💥 சோதனை அடிப்படையில் இந்த ‘ரோபோ’ போலீஸ் சிறுவர்-சிறுமிகளுக்கான போக்குவரத்து பூங்காவில் முதன்முதலில் தனது பணியை தொடங்குகிறது .

💥 அடுத்தக்கட்டமாக போக்குவரத்து போலீசில் இந்த ‘ரோபோ’ போலீசுக்கு பணி கொடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.