ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு மத்திய அமைச்சர் உறுதி!!!

Job Recruitment / Trend News

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு!!!

💥 ஆதார் எண் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது, இந்த வழக்கில் குறிப்பிட்டவற்றில் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும் இணைப்பதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

💥 இந்நிலையில் ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

💥 ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன.

💥 இந்நிலையில் விரைவில் ஆதார் எண்ணையும், வாகன ஓட்டுநர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. 💥 எந்தவொரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ள ஆதார் எண் சமூகரீதியில் பெரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.

💥 ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுநர் உரிமம் இணைக்க நிலுவையில் உள்ள மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பு, ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்றார்.

💥 இதன்மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

💥 எனவே ஓட்டுநர் உரிமம், ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. நாட்டில் இதுவரை 123 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

💥 டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்து திறம்பட மத்திய அரசு செயலாற்றி வருகிறது” என்றார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.