33வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!!!

Job Recruitment / Trend News

தமிழகத்தின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி!!!

💥 தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

💥 இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது.

💥 இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். 💥 அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.

💥 அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💥 விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார். 33 வது மாவட்டமாக தமிழகத்தில் உருவாக இருக்கிறது கள்ளக்குறிச்சி.

💥 விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

💥 இதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டுமெனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.