RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 கல்வித்துறைக்காக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதற்கும், கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்கின்ற வகையிலும், டி.வி சேனல் ஒன்றை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 🌀 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ‘ஸ்மார்ட்’ தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🌀 குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆமதாபாத்தில் தயாராகி வருகிறது.

🌀 தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் தொடர்பாக, 1926 ஆம் ஆண்டின் தொழிற்சங்க சட்டத்தின் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

🌀 ஐஐடி கௌகாத்தியின் அறிவியலாளர்கள், பாலின் புத்துணர்வைக் கண்டறியவும், எந்த அளவிற்கு அது பதப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய உதவும், ஒரு எளிமையான காகிதத் தொகுப்பை உருவாக்கியுள்ளனர்.

🌀 தொழிலகங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக மற்றும் விரைவாக வழங்குவதற்காக வலைதள அடிப்படையிலான, ஒற்றைச் சாளர அமைப்பான, பரிவேஷ் என்ற வசதி அனைத்து மாநிலங்களிலும் திறக்கப்படவுள்ளது.

🌀 ஆசிய மறுசீரமைப்பு முன்முயற்சி சட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

🌀 சுற்றுச்சூழல் பாதிப்பு சம்பந்தப்பட்ட எதிர்ப்புகள் உள்ள போதிலும், ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை இணைக்கும் இரயில் மற்றும் சாலை சுரங்கப் பாதைக்கு, ஜெர்மானிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

🌀 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
🌀 நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி, சீன விண்கலம் சாதனை படைத்துள்ளது.

🌀 தெலுங்கானாவின் MNJ புற்றுநோயியல் மற்றும் பிராந்திய புற்றுநோய் நிறுவனமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசால் நடத்தப்படும், முதல் மருத்துவமனை ஆகியுள்ளது.

🌀 தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29-ம் ஆண்டு கருத்தரங்கில், தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

🌀 மணிப்பூரின் வாஹென்பாம் லாம்கான்பா (வயது 15) வீர தீரச் செயலுக்கான, தேசிய விருதுக்காக, இந்திய குழந்தைகள் நல வாரியக் குழுவால் (Indian Council for Child Welfare-ICCW) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🌀 ஜீனோ விண்கலமானது, எரிமலைப் புகைத் திரள்களின் புதிய புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இது வியாழன் வாயுக் கோளின் மீதான திட்டத்தின் 17-வது பயணத்தின் போது படம் பிடித்துள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.