பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு!!!

Job Recruitment / Trend News

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு

💥பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

💥 வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, ‘தியரி’ பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, தியரி பாடங்களுக்கும், 90 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் அமைக்கப்படும்.

💥 செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு, 70 மதிப்பெண்ணுக்கும், உயிரியல் தேர்வில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண் வீதம், 70 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கும்.

💥 தமிழ், ஆங்கிலம் மற்றும் சிறுபான்மை மொழி பாடங்களுக்கு, முன்பிருந்த இரண்டு தாள்களுக்கு பதிலாக, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். 💥 மொழி பாடம்: ஒரு மதிப்பெண் வினாக்கள்-14, இரண்டு மதிப்பெண் – 12, நான்கு மதிப்பெண்-7, ஆறு மதிப்பெண்-3 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

💥 ஆங்கிலம்: ஒரு மதிப்பெண் – 20, 2, 3 மற்றும் 5 மதிப்பெண்ணில் தலா, 7 என, 41 கேள்விகளுக்கு, 90 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.

💥 சிறுபான்மை மொழி: ஒரு மதிப்பெண்-14 கேள்விகள், 2 மதிப்பெண் – 12, நான்கு மதிப்பெண்-7, ஆறு மதிப்பெண்-4 கேள்விகள் என மொத்தம், 37 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

💥 செய்முறை பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில் – 15 கேள்விகள் , 2 , 3 மதிப்பெண்ணில்- 6, 5 மதிப்பெண்ணில் 5 கேள்விகள் என, 32 கேள்விகளுக்கு, மொத்தம், 70 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.


💥உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தனித்தனியாக, 35 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் இருக்கும்.

💥ஒவ்வொரு பாடத்திலும், ஒரு மதிப்பெண்-8, இரண்டு மதிப்பெண்-4; மூன்று மதிப்பெண்-3, ஐந்து மதிப்பெண்-5என, 35 மதிப்பெண்ணுக்கு, 17 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

💥 தொழிற்கல்வி, 'தியரி' தேர்வில், ஒரு மதிப்பெண், 15; மூன்று மதிப்பெண், 10; ஐந்து மதிப்பெண், ஐந்து; 10 மதிப்பெண், இரண்டு என, 32 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

💥 இந்த வினாத்தாள் அமைப்பு முறையை, மாணவர்களுக்கு பள்ளிகள் தெளிவாக அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.