RRB தேர்வு – 2019 : இன்றைய (ஜனவரி 04) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த, ‘வாழ்விட மேம்பாட்டு திட்டம்’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 🌀 மேற்கு வங்காள அரசானது கிருஷி கிரிஷாக் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு 2 நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.

🌀 வருடத்திற்கு இருமுறை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நிதிநிலைத் தன்மை அறிக்கையின் (Fiscal Stability Report-FSR), 2018 ஆம் ஆண்டிற்கான 18-வது வெளியீட்டை சமீபத்தில் RBI வெளியிட்டுள்ளது.

🌀 அசாம் ஒப்பந்தத்தின் 6-வது உட்பிரிவினை அமல்படுத்துவதற்காக, உயர்மட்டக் குழு ஒன்றினை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🌀 விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் (Doubling Farmers Income – DFI) பரிந்துரைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக, அரசானது விரைவில் ஒரு குழுவை அமைக்கவுள்ளது.

🌀 மகாராஷ்டிர மாநில அரசானது, அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கி 100% மின்சாரம் வழங்கல் எனும் இலக்கை அடைந்துள்ளது.

🌀 2020ம் ஆண்டு முதல், புதிய பொறியியல் கல்லூரிகளை அமைப்பதை தடுக்க, B.V.R. மோகன் ரெட்டி (IIT – ஹைதராபாத்-ன் தலைவர்) என்பவரின் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

🌀 ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக, ‘Women on Wheels’ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.

🌀 வறுமையை ஒழிக்க முயல் வளர்ப்பு திட்டத்தை, சீனா முன்னெடுத்து உள்ளது.

🌀 சீனாவில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம், 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
🌀 விக்கெட் கீப்பர்களான ஜாக் ரூசெல் (இங்கிலாந்து) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் ஒரே டெஸ்ட் போட்டியில், அதிக கேட்சுகளைப் பிடித்த சாதனையை இந்தியாவின் ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

🌀 இந்திய வேகப்பந்து வீரர்களின் மூவர் கூட்டணியான இஷாந்த் சர்மா, முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒரு நாள்காட்டி வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 34 வருடமாக இருந்த சாதனையை முறியடித்தனர்.

🌀 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில், மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

🌀 இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக, இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

🌀 5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டு அருகே, மகேந்திராசிட்டி மைதானத்தில் தொடங்கியுள்ளது.

🌀 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 04-ஆம் தேதி லூயிஸ் பிரெய்ல் நினைவாக, உலக பிரெயில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.