Very Soon New Facility To Introduce Remove Aadhaar Number !!!

Job Recruitment / Trend News

ஆதார் எண்ணை நீக்க புதிய வசதி விரைவில் அறிமுகம்!!!

🌀 ஆதார் எண்ணை அரசிடம் ஒப்படைத்து, தங்களை பற்றிய தகவல்களை நீக்கும்படி, பொதுமக்கள் கோரும் வசதியை, விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

🌀 அரசு தொடர்பான பணிகள், மானியங்கள் பெறுவதற்கு மட்டுமே, ஆதாரை கட்டாயமாக்க வேண்டும். மொபைல் போன் இணைப்பு, வங்கிக் கணக்கு துவக்குவது போன்ற தனியார் அளிக்கும் சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமில்லை என, கூறப்பட்டது.

🌀 இதற்கிடையே, ஆதார் எண்ணால், தங்களை பற்றிய தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிவதாகவும், தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.
🌀 ஆதார் எண்ணை பெற்றவர்கள், அதை அரசிடம் ஒப்படைத்து, தங்கள் தகவல்களை நீக்கும்படி கோரும் வசதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🌀 இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

🌀 வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, ‘பான் கார்டு’ பெறுவதற்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஆதார் கட்டாயம் என்பதால், பான் கார்டு பெற்றவர்கள், தங்கள் ஆதாரை திருப்பித் தர முடியாது.

🌀 அரசு அளிக்கும் மானியம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரை திருப்பித் தந்தால், இந்த வசதிகள் கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளது.
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.