TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 06)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. 🌀 டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையில் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ரோஷினி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

🌀 மருத்துவ உலகில் சாதித்த தமிழர்களின் சாதனைகளை பற்றி உலகறியச் செய்வதற்கான, விருது விழா ஒன்றை உலகத் தமிழ் அமைப்பு, பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🌀 சுவிஸ் நாட்டின் அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🌀 டாலர் மற்றும் யூரோவுக்கு பதிலாக ரூபாயை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

🌀 அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார், பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா. இதன் மூலம் 82 ஆண்டுகள் சாதனையையும் அவர் முறியடித்தார்.

🌀 ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிஜு பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 குளோபல் கார்பன் ப்ராஜக்ட் (Global Carbon Project) அமைப்பின் ஆய்வின்படி, 2018-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

🌀 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
🌀 வேகமாக வளர்ந்து வரும் உலகின் டாப் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியன இடம்பெற்றுள்ளன. 

🌀 சென்னையைச் சேர்ந்த, நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி இளைஞர் ஸ்ரீராம் சீனிவாஸ், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின், ‘ரோல் மாடல்’ விருது பெற்றார்.

🌀 குஜராத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இதயவியல் நிபுணர் மருத்துவர் தேஜாஸ் படேல், 30 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த, நடுத்தர வயதுள்ள பெண்ணுக்கு, ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சையை செய்து, மருத்துவ உலகில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

🌀 ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கில், ரயிலின் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இந்திய ரயில்வே வாரியம் சாதனை படைத்துள்ளது.