Tirupur Record Of Pushing New York And Beijing!!!

Job Recruitment / Trend News

நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி திருப்பூர் சாதனை!!!

🌀 உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது.

🌀 உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை “ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ்” அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது.

🌀 முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் இருக்கிறது. அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் பெங்களூரும்,நான்காவது இடத்தில் ஹைதராபாத்தும், ஐந்தாவது இடத்தில் நாக்பூரும் உள்ளது.
🌀 திருப்பூரின் வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக உள்ளது. இதனால் திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

🌀 திருப்பூர் இந்த பட்டியலில் சென்னையை முந்தி இருக்கிறது. சென்னை இதில் 9வது இடத்தில் உள்ளது.

🌀 அதேபோல் இதில் திருச்சியும் பெரிய சாதனை படைத்து இருக்கிறது. திருச்சி இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது.

🌀 உலகின் பெரிய நகரங்களை கூட திருப்பூர் முந்தி இருக்கிறது. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா உள்ளிட்ட பெரிய நகரங்களை விட திருப்பூர் அதிக வளர்ச்சியை பெற்று இருக்கிறது.

🌀 இதற்கு திருப்பூரில் இருக்கும் தொழிற்சாலைகள்தான் காரணம். இங்கு நூல் உற்பத்தியும், பின்னலாடை உற்பத்தியும் பெரிய அளவில் அந்நகரத்தை முன்னேற்றி இருக்கிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.