Women’s Name For Houses !!!

Job Recruitment / Trend News

வீடுகளுக்கு பெண்களின் பெயர்!!!

🌀 ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அனைத்து வீடுகளுக்கும், பெண்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

🌀 ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள, ஊனா மாவட்டத்தில் மாவா கோஹ்லான் என்ற கிராமத்தில், 550 வீடுகள் உள்ளன.

🌀 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து வீடுகளின் நுழைவாயிலில், பெண்களின் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.
🌀 வீடுகள் மட்டு மல்லாமல், கடைகள் மற்றும் சந்தைகளிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

🌀பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

🌀 அதன்படி, ஒவ்வொரு பெண் குழந்தையின் திருமணத்தின் போதும், 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

🌀 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்திற்கு, சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசு வேலைகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட துணை ஆணையர், ராகேஷ் குமார் பிரஜாபதி கூறினார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.