TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 05)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 உலக சாதனை முயற்சியாக விருதுநகரில், தவில் வித்வான் எம்.ராமசாமி (வயது 58) தொடர்ந்து 7 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனை படைத்தார்.
🌀 சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், (IITF- Indian International Trade Festival) சிறந்த மாநிலமாக, உத்திரகாண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

🌀 ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், மாவா கோஹ்லான் என்ற கிராமத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து வீடுகளின் நுழைவாயிலில், பெண்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளன.

🌀 பேருந்து திரள்களின் இருப்பிடத்தை 10 விநாடி இடைவெளியில் கண்டறியும் otd.delhi.gov.in எனும் திறந்தநிலை தரவுதளத்தை, டெல்லி அரசானது வெளியிட்டுள்ளது.

🌀 கர்நாடகாவில் இயங்கிவரும் அரசு முதல்நிலை மற்றும் டிகிரி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, 100 சதவீதம் கட்டணமில்லாமல் இலவச கல்வி வழங்கப்படும், என கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

🌀 கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் திறனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், எல்லை மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை எளிதாக்குதல் ஆகியவற்றிற்காக ஹாட்லைன் (Hot Line) ஒன்றை அமைக்க இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

🌀 ஆஸ்திரேலியாவிலேயே முதன் முறையாக மெல்பர்னில் அனேலியா மைபர்க் எனும் பெண்ணுக்கு, 3டி எனும் முப்பரிமாண முறையில் தாடை உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

🌀 தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
🌀 இந்தியாஸ்பெண்ட் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள், நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக இருப்பதாக ஆய்வில் கூறுகிறது.

🌀 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 – ஆம் ஆண்டுக்கான, அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலில், நடிகை தீபிகா படுகோன் சென்ற ஆண்டு 11ம் இடத்தில் இருந்தவர், இந்த ஆண்டு ஏழு இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இதில் தொடர்ந்து முதலிடத்தில் சல்மான் கான் உள்ளார்.

🌀 கென்யாவைச் சேர்ந்த யாசின் நூரானி மற்றும் சிலியைச் சேர்ந்த நிக்கோலஸ் ஒரிலானா ஆகியோர் 2018 ஆம் ஆண்டின் சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருதை வென்றுள்ளார்.

🌀 தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

🌀 பருவநிலை மாற்றம் உலகம் முழுதும் மிகப்பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள உலக வங்கி 2021-2025 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

🌀 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ஆம் தேதி, சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் கடைபிக்கப்படுறது.

🌀 இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான, நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால், சென்னையில் காலமானார்.