TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 04)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 அதிவிரைவு ரயில்களின் 3 ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 🌀 இந்தியாவின் நீளமான ரயில் – சாலை பாலமான போகிபீல் பாலத்தை, பிரதாமர் மோடி டிசம்பர் 25-ம் தேதி திறந்து வைக்கிறார். 

🌀 இங்கிலாந்து ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள, ரோபோவின் ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

🌀 பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (ஒபெக்) விலக கத்தார் முடிவு செய்துள்ளது.

🌀 இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் (37 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

🌀 இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக, மகேந்திர சிங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🌀 செலவினங்கள் துறை செயலராக இருந்த அஜய் நாராயண் ஜா (ஏ.என்.ஜா), நிதித்துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀 தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. மத்தியப்பிரதேச அணி  7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது.

🌀 யாகூ இணையதளம் வெளியிட்டுள்ள, இந்த ஆண்டு, செய்திகளில் அதிகம் இடம்பிடித்தோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
🌀 சர்வதேச அளவில், சமூக வலைதளமான, ‘யூ டியூப்’ மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் குறித்து, பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த, ரயான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.

🌀 இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு (யுஏஇ) இடையே வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

🌀 நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

🌀 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.