The mysterious fever that threatens Kerala!!!

Job Recruitment / Trend News

கேரளாவை அச்சுறுத்தும் காங்கோ காய்ச்சல்!!!

🌀 கேரளாவில் பன்றி, நிபா காய்ச்சலை தொடர்ந்து காங்கோ காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. இது தற்போது பொது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி  வருகிறது

🌀 கடந்த 2017-ம் ஆண்டில் கேரளாவில் பரவிய மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் நிபா வைரஸ் பரவியது. இதில் பலர் உயிரிழந்தனர்.

🌀 பின்னர் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கை காரணமாக காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.
🌀 இதற்கிடையே டிசம்பர் மாதத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

🌀 இந்த நிலையில் தற்போது கேரளாவின் திருச்சூர் பகுதிகளில் காங்கோ காய்ச்சல் என்றழைக்கப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் திருச்சூருக்கு வந்த ஒருவர் காங்கோ காய்ச்சல் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🌀 மேலும் சிலருக்கு காங்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் திருச்சூர் பகுதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

🌀 இதுகுறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியபோது,காங்கோ காய்ச்சல் காற்றின் மூலம் பரவாது. நோயாளிகளின் ரத்தம் அல்லது உமிழ்நீர் வழியாக மட்டுமே பரவுகிறது. தற்போது அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

🌀அவரது ரத்த மாதிரி சோதனைக்காக கர்நாடக மாநிலம் மணிபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் கடந்த 1944ம் ஆண்டு கிரீமியா நாட்டில் பரவியது. பின்னர் 1969ல் காங்கோவில் பரவி ஏராளமானோர் இறந்தனர்.

🌀 இதையடுத்து இந்த காய்ச்சலுக்கு காங்கோ காய்ச்சல் என பெயர் வந்தது. இந்தியாவில் இதுவரை இந்த நோய் அதிகம் பரவியது இல்லை.

🌀 காங்கோ காய்ச்சல் உள்ளவர்களுக்கு கண்கள் சிவப்பாகும், கடும் தலைவலி, முதுகுவலி, மூட்டு வலி, வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் 105 டிகிரிக்கு மேல் இருக்கும் என்று கூறினார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.