The Highest-Paid YouTube Star Of 2018 Is a Seven Year Old Boy !!!

Job Recruitment / Trend News

7 வயது சிறுவனின் வருமானம் இவ்வளவு கோடியா!!!

🌀 அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, சர்வதேச அளவில் பிரபலமானது. இது, சர்வதேச அளவில், சமூக வலைதளமான, ‘யூ டியூப்’ வாயிலாக, அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி, பட்டியல் வெளியிட்டு உள்ளது.

🌀 இதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரயான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான்.

🌀 ரயானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, 2015ல், ‘ரயான் டாய்ஸ் ரிவியூ’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ துவங்கப்பட்டது.
🌀 இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரயான் விமர்சனம் செய்து வருகிறான். இவன் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில், ‘ஹிட்’ அடித்தன.

🌀 ரயான் யூ டியூப் சேனலுக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரயான் விமர்சனம் செய்து வெளியிடும், ‘வீடியோ’க்கள், 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன.

🌀 விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், 2018ல், 154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளான்.

🌀 இவனை கவுரவிக்கும் வகையில், 'ரயான் வேர்ல்டு' என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, 'வால்மார்ட்' நிறுவனம், சமீபத்தில், ஒரு தனிப் பிரிவையே துவங்கி உள்ளது.

🌀இதன் மூலம், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.