TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 03)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், ‘181’ என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 🌀 கோவையில் ரயில்களில் சுத்தம், சுகாதாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண, ‘கோச் நண்பன்’ எனும், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🌀 உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

🌀 6-வது பதிப்பு மற்றும் 2019க்கான இந்திய திறன்கள் அறிக்கையின்படி அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேசமானது, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

🌀 காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

🌀 பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் 14 காரட் ‘வயாகரா’ தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.

🌀 ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான, ரோஸ்காஸ்மோஸ் ஆனது மாரத்தான் எனும் பெயரிடப்பட்ட, செயற்கைக்கோள் அமைப்பினை தொடங்க திட்டமிட்டுள்ளது.

🌀 ACS உயிரிபொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வின்படி, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அறிவியலாளர்கள் ரேடியோ அதிர்வெண் கதிரியக்கத்தினைப் பயன்படுத்தி முதன்முறையாக என்சைம்களை உருவாக்கியுள்ளனர்.

🌀 பத்தாண்டுகளுக்குள் 56 புதிய போர்க்கப்பல்களையும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

🌀 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 62-ஆவது, தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்கீட் பிரிவில், மகேஸ்வரி செளஹான் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார்.

🌀 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த, வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
🌀 நாடு சுதந்திரம் அடைந்த பின், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக, அந்த மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம், தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முஸ்லிம் ஆவார்.

🌀 நுரையீரல் ஆரோக்கியம் மீதான 50-வது ஒன்றிய சர்வதேச மாநாடானது, அடுத்த வருடம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச ஒன்றியமானது அறிவித்துள்ளது. இம்மாநாட்டின் கருத்துரு : “அவசர நிலையின் முடிவு : அறிவியல், தலைமைத்துவம், நடவடிக்கை”.

🌀 பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு, போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் தொடங்கியது.

🌀 2018ம் ஆண்டிற்கான பாலன் டி’ஓர்’ விருதை, குரேஷியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் (வயது 33) வென்றுள்ளார்.

🌀 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் ரஷிய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

🌀 2012ஆம் ஆண்டுமுதல் டிசம்பர் 3ஆம் நாள், உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.