TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 02)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 🌀 இந்தியாவின் முதல் என்ஜினில்லா ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இது 180 கி.மீ. வேகத்தை கடந்தது.

🌀 கூகுளின் பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கால் ஸ்க்ரீன் என்ற புதிய வசதி, வரும் அழைப்பை ஏற்கும் முன்பே, யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறிந்து கொள்ள உதவுகிறது.

🌀 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் செனகல் நாட்டின் தூதுவரிடம் 2 மின்-ரிக்சாக்ளை புதுடெல்லியில் ஒப்படைத்தார்.

🌀 மெக்சிகோ நாட்டின் புதிய அதிபராக  ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் பதவியேற்றுக் கொண்டார்.

🌀 ஜப்பானில் அரியவகை மீன் ஒன்றை உறைய வைத்து மீண்டும் உயிர்ப்பித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.

🌀 வான்வெளி பாதுகாப்பிற்கான நவீன ஏவுகணைகளை, ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
விளையாட்டு

🌀 மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

🌀 தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
🍀 சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

🌀 இந்திய தேர்தல் கமிஷனின் 23-வது தலைமை ஆணையாளராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

🌀 இந்திய கடற்படையின் இரு போர்க்கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கவும், அர்ஜுன் பீரங்கிகளுக்கு கவச மீட்பு வாகனங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

🌀 இந்திய-அமெரிக்க விமானப்படைகளின் 12 நாள் கூட்டுப் பயிற்சி மேற்கு வங்கத்தில்  தொடங்குகிறது.

🌀 போர் காலத்தில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து செயல்படுவதற்கு முன்னேற்பாடாக இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

🌀 உலக கணினி கல்வி தினம், டிசம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

🌀 சர்வதேச அடிமைத்தனம் ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.