TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 01)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 முதல்வரின் விரைவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட அரசு மருத்துவக் காப்பீட்டுத் தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 🌀 கல்வி பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் ஐ.ஐ.டி – கரக்பூர் (IIT – kharagpur) மற்றும் ஆலாந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தாகியுள்ளது.

🌀 குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ரமபோசா பங்கேற்கிறார்.

🌀 கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் மற்றும் யுனைடெட் இமேஜிங் ஹெல்த்கேர் ஆகியோர் இணைந்து, 20-30 வினாடிகளுக்குள் முழு மனித உடலையும் முதலாவது முறையிலேயே ஸ்கேன் செய்து, முப்பரிமாண படத்தை பிடிக்கக்கூடிய, உலகின் முதலாவது மருத்துவ படவியல் ஸ்கேனரை உருவாக்கியுள்ளனர்.

🌀 திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 62-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையை சேர்ந்த வீரர் ஆதித்யா கிரி தங்கப் பதக்கம் வென்றார்.

🌀 பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் 21-வது மகாவீர் விருதுகள் வழங்கும் விழாவில், விலங்குகள் நல ஆர்வலர் ஷிரானி பெரைரா, பி.சி.பராக், சமூக சேவகர் இந்திரமணிசிங் ஆகியோருக்கு, விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினரான, குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
🍀 கோவாவின் பனாஜியில் நடைபெற்ற 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் டான்பாஸ் (Donbass) திரைப்படமானது புகழ்மிக்க தங்கமயில் விருதினைப் பெற்றது.

🌀 “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

🌀 BFR (Big Falcon Rocket) – இராக்கெட்டின்பெயரை “ஸ்டார் ஷிப்” என மாற்றுவதாக, ஸ்பேஸ் × நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, “எலன் மஸ்க்” என்பவர் அறிவித்துள்ளார்.

🌀 நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்தில் உள்ள கிஸ்மா கிராமத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

🌀 2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பாக கருதப்பட்டது.
​​​​​​​
🌀 இந்தியா தனது 75-வது சுதந்திரனத்தை கொண்டாடும் வேளையில், வரும் 2022-ம் ஆண்டு நடைபெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

🌀 உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டின், கருப்பொருள் “ஆரோக்கியத்துக்கான உரிமை” என்பதாகும்.