Rain For 3 Days In Tamil Nadu!!!

Job Recruitment / Trend News

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வானிலை மையம் தகவல்!!!

🌀 வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 1-ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் ‘கஜா’ புயல் பெரிய அளவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கியது.

🌀 அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் மழை பெய்தது. 🌀 கடந்த மாதம் 25-ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

🌀 இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌀 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் நிலையில், வருகிற 4, 5, 6-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.
🌀 4-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

🌀 கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

🌀 வருகிற 5 , 6-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 5-ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

🌀 சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். 4, 5, 6-ஆம் தேதிகளில் சில முறை மிதமான மழையும் பெய்யக் கூடும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.