Intense storm of Tamilnadu – GAZA !!!

GK TNPSC

INSTRUCTION FOR GROUP 2 CANDIDATE

தீவிரமடையும் கஜா புயல் பற்றிய தகவல்கள்

💥தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

💥மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

💥வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

💥இந்த காற்றழுத்தமானது, குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக்கு அருகில் நீடிக்கிறது.

💥இதற்கிடையில் அப்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

💥அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து சார்பில் கஜா என்று புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.


💥கஜா புயல் வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

💥அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது.


💥இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14ம் தேதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும்.

💥இதன் காரணமாக நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

💥இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

💥இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 15ம் தேதி வியாழக்கிழமை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 14 ஆம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் கனமழை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

💥வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழை, வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் பெய்யக்கூடும். கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

💥இது தவிர, தென் தமிழகம், கேரளாவில் சில பகுதிகளிலும் இந்த காலகட்டத்தில் கன மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

💥தெற்கு கேரளா, குமரி, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

💥கனமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

💥தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.