Nuclear-powered INS Arihant submarine

GK TNPSC

INSTRUCTION FOR GROUP 2 CANDIDATE

அணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்!!!!

💥இந்தியாவின் அணு ஆயுதம் பலம் வளர்ச்சியடைந்து கொண்டடே போகின்றது. மற்றொரு புறம் மற்ற நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவிலும் உள்நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன.


💥இந்தியாவால் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களும், தொழில் நுட்ப உபகரணங்களும் சோதனையிலும் வெற்றி நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றன.

💥இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது.

💥இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் கவலைப்பட துவங்கியுள்ளது.

ஐஎன்எஸ் அரிஹந்த்:

💥அணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ளது.


💥இது மற்ற நாடுகளில் உள்ள போர் கப்பல்களுக்கும் இது சவால் விடும் வகையில் இருக்கின்றது.

6 ஆயிரம் டன் எடை:

💥முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது.

💥ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது.

💥இந்திய பெருங்கடல் பகுதியில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அண்மையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இந்தியா இயக்கி அந்த செயல்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்து இருக்கின்றது.

💥இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார்.

💥தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது.

💥இந்தியா அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகள் ரூ.36,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

💥மேலும் இது ஓரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. இதை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் கதறின.

💥இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் தனது சூப்பர் சோனிக்கு ஏவுகணையை சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

💥இதற்கு தக்கபதிலடியாக கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

💥இது எதிரிநாட்டு ஏவுகணைகளையும் வானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது.

💥இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு தனது சொந்த ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், இந்தியா தற்போது ஏராளமான ஆணு ஆயுதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.