Detail about Swine Flu disease!!!

GK TNPSC

INSTRUCTION FOR GROUP 2 CANDIDATE

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு!!!!

💥பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

💥இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

💥பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.


💥1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

💥மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

💥கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

💥குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது.


💥குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

💥இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

💥ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

💥இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

💥முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது.

💥இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

💥நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம்.

💥ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்


💥பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள்:

👉 இடைவிடாத காய்ச்சல்

👉மூக்கில் நீர்வடிதல்

👉தொண்டையில் வலி

👉வயிற்று போக்கு

👉மயக்கம்

👉பசியின்மை

👉சளி தொல்லை

👉சாப்பாடு மீது வெறுப்பு

👉வாந்தி எடுத்தல்

💥எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் , உடனடியாக அரசாங்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவும் .

💥இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.

💥வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும்.

💥பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

💥இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

💥நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.

💥நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

💥காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் எ‌ன்று‌ம் தமிழக சுகாதாரத்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

💥இது தொட‌ர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும்.

💥குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

💥இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு’ மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.

💥பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.


💥குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?

👉தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்

👉மூச்சு விட சிரமப் படுவார்கள்

👉உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்

👉 தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்

👉அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்

👉தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்

👉தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்

💥பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

💥இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.

💥மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவவேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒருமுறை கைகளை கழுவவேண்டும்.

💥காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.