How to Ready for TNPSC Group 2 Exam

GK TNPSC

குரூப் 2 தேர்வுக்கு தயாராகுவது எப்படி

குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் முறைகள்

💥தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

💥மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 2 தேர்வுகளில் மட்டும் மூன்றுக் கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

💥தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு மூலமாக 1199 பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த குரூப்-2 தேர்வானது வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

💥இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள் , அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும்.

💥குரூப் 2 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.

💥ஒரு சாதாரணமான போட்டி தேர்வாளரால் படிக்காமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 200க்கு 100 முதல் 120 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும்.

💥தேர்வுக்கு படித்து வரும் தேர்வாளரால் 140 கேள்விகள் வரை விடையளிக்க முடியும்.


💥குரூப் 2 தேர்வில் கணித வினாக்களை பொறுத்த வரை 15 வினாக்கள் படிக்காமல் விடையளிக்க முடியும்.

💥பயிற்சியின் மூலம் கூடுதலாக 5 வினாக்கள் விடையளிக்க இயலும். மீதமுள்ள 5 வினாக்கள் கடினமாக இருக்கும். கூடுதல் பயிற்சி, அனுபத்தின் மூலம் அந்த 5 மதிப்பெண்களை பெற முடியும்.

💥மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

💥நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.

💥பொருத்துக வினாக்களை பொறுத்தவரை நான்கில் ஒன்றோ அல்லது இரண்டோ நமக்கு தெரிந்து இருக்கும். எனவே இதனை எளிமையாக பொருத்தி பார்த்து விடையளிக்க முடியும்.

எவ்வளவு மதிப்பெண் வெற்றியை தீர்மானிக்கிறது?

💥இந்த கேள்விக்கு சரியான பதில் கேள்வித்தாளின் கடினத்தன்மையினைப் பொறுத்தது. கேள்வித்தாள் கடினமாக இருக்கும் பட்சத்தில் 160 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தால் வெற்றிவாய்ப்பினை பெறலாம்.

💥கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் பட்சத்தில், விடையளிக்க வேண்டிய கேள்விகளின் எண்ணிக்கை 180 ஆக உயருகிறது.

💥சராசரியாக 100 மொழிப்பாட கேள்விகளுக்கு 60 முதல் 70 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்கலாம். இதுவே 90க்கு மேல் அதிகரிக்குமானால் வெற்றியை எளிதாக தட்டிப்பறிக்க முடியும்.

💥உங்களின் வெற்றியானது பொது வினாக்களுக்கு எப்படி விடையளிக்க போகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.

💥 தேர்வு கடினமோ, எளிதோ பொது அறிவுப்பகுதியில் 80 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். இந்த யுக்தி சாத்தியமானால், 90+80=170 ஒரு நல்ல மதிப்பெண்ணை பெற முடியும் இதன் மூலம் அரசு வேலை என்ற கனவு சாத்தியமாகும்.

💥இதுவே கேள்வி எளிமையாக கேட்கப்பட்டுள்ளது என்றால் 95+85=180, இது வெற்றியை மேலும் எளிமையாக்கும்.

💥விடா முயற்சியுடன் குரூப் 2 தேர்வு எழுதவுள்ள அனைத்து தேர்வாளர்களும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு நித்ராவின் வாழ்த்துகள்...


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.