TNPSC Group 2 Pothu Tamil Model question paper – 15

GT TNPSC

TNPSC Pothu Tamil Model Question paper 15

குரூப் 2 பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 15


பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளினை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


TNPSC Group 2 தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.

கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்:

💠பின்வருவனவற்றுள் சி.சு. செல்லப்பா எழுதிய நூல் எது?
அ) வண்ணத்தமிழ்
ஆ) முதலும் முடிவும்
இ) சுதந்திர தாகம்
ஈ) மேல்நோக்கிய பயணம்

💠இரா. மீனாட்சியின் படைப்பு எது?
அ) கொங்கு தேர்வாழ்க்கை
ஆ) பறத்தல் அதன் சுதந்திரம்
இ) உதயநகரிலிருந்து
ஈ) அனைத்தும்

💠பூஜ்ஜியங்களின் சங்கிலி என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) மு. மேத்தா
ஆ) அப்துல் ரகுமான்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) கல்யாண்ஜி

💠ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்களில் சரியானது எது?
அ) தோணிகள் வருகின்றன
ஆ) வணக்கம் வள்ளுவா
இ) சூரியப் பிறைகள்
ஈ) அனைத்தும்

💠சாலை இளந்திரையன் எழுதிய நூல்களில் சரியானது எது?
அ) உலகம் ஒரு குடும்பம்
ஆ) புரட்சி முழக்கம்
இ) வெற்றி மலர்கள்
ஈ) அனைத்தும்

💠ஞானக்கூத்தன் எழுதிய நூல்களில் சரியானது எது?
அ) ஆவதும் பெண்ணாலே
ஆ) நேற்று யாரும் வரவில்லை
இ) பரிசில் வாழ்க்கை
ஈ) அனைத்தும்

💠சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்களில் தவறானது எது?
அ) பூஜ்ஜியங்களின் சங்கிலி
ஆ) ஒரு கிராமத்து நதி
இ) சிரித்த முத்துக்கள்
ஈ) விதை போல் விழுந்தவன்


💠மு. மேத்தா எழுதிய நூல்களில் தவறானது எது?
அ) வெளிச்சம் வெளியே இல்லை
ஆ) ஒரு வானம் இரு சிறகு
இ) நேயர்விருப்பம்
ஈ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

💠புதுக்குரல்கள் – கவிதை நூலை வெளியிட்டவர் யார்?
அ) ஆலந்தூர் மோகனரங்கன்
ஆ) சிற்பி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) சி.சு. செல்லப்பா

💠கவிஞர் ந. பிச்சமூர்த்தி 1925 முதல் 1938 வரை ………………………………………. ஆக பணியாற்றினார்.
அ) வழக்கறிஞர்
ஆ) ஆசிரியர்
இ) பேராசிரியார்
ஈ) பத்திரிக்கை நிருபர்

💠இன்று நீ இருந்தால் என்ற குறுங்காப்பியத்தினையும், மாற்று இதயம் என்ற கவிதைத் தொகுதியையும் எழுதிய கவிஞர் யார்?
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) தருமு சிவராமு
இ) கலாப்பிரியா
ஈ) சி.சு. செல்லப்பா

💠பின்வரும் நூல்களுள் கவிஞர் சாலை இளந்திரையனால் எழுதப்பட்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்ற நூல் எது?
அ) உரைவீச்சு
ஆ) காலடி ஓசை
இ) கடல்புறா
ஈ) யுகசக்தி

💠கவிஞர் ந. வேங்கட மகாலிங்கத்தின் புனைப்பெயர் என்ன?
அ) ந. மீனாட்சி
ஆ) ந. சிவராமு
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) ந. தேவதேவன்

💠கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கவிஞர் யார்?
அ) அப்துல் ரகுமான்
ஆ) மு. மேத்தா
இ) சிற்பி
ஈ) ஈரோடு தமிழன்பன்

💠கவிஞர் முகம்மது மேத்தாவால் படைக்கப்பட்ட படைப்புகளுள் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்பு எது?
அ) நந்தவன நாட்கள்
ஆ) தெருவிழாவில் ஒரு தெருப்பாடல்கன்
இ) மனச்சிறகு
ஈ) ஆகாயத்திற்கு அடுத்த வீடு

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!👉👉👉பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளினை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!👈👈👈


🌟TNPSC Group 2 பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் பொதுத்தமிழ் வினா விடைகளை உங்களது நண்பர்களுக்கும், TNPSC group 2 தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.