TNPSC Group 2 Maths Important Question and Answer – 8

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths – 8

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 8

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠 10 ஆண்கள் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் வேலை செய்வதால் 18 நாட்களில் ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்கின்றார்கள். அதே வேலையை 15 ஆண்கள் ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம் செய்தால் 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும்?

விடை : 6 மணிநேரம்
👉விளக்கம் :
ஒரு நாளில் தேவைப்படும் நேரத்தினை X எனக் கொள்வோம்.
ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு நாளுக்கு தேவைப்படும் நேரத்தின் எண்ணிக்கை குறையும்.
நாட்களின் எண்ணிக்கை குறையும் போது, ஒரு நாளுக்கு அதிக நேரம் தேவைப்படும்.
ஆகவே, இவை எதிர்த்தகவில் அமைந்துள்ளது.
ஆண்கள் 15 : 10 = நாட்கள் 12 : 18 : : 6 : X
15 * 12 * 6 = 10 * 18 * X
X = (15 * 12 * 6) / (10 * 18)
X = 6 மணிநேரம்
அதே வேலையை 15 ஆண்கள் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் செய்தால் 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும்

💠 இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அவ்விரு எண்களைக் காண்க.

விடை : (27, 189)
👉விளக்கம் :
தேவையான எண்கள் = 27a, 27bஎன்க.
27a + 27b = 216
a + b = 216/27
a + b = 8
8 என்ற எண்ணின் Co prime-ல் 8 என வரும் எண்கள் (1, 7), (3, 5)
தேவையான எண்கள் = ( 27 *1, 27 * 7) மற்றும் (27 * 3, 27 * 5)
= (27, 189) மற்றும் (81, 135)
மேற்கண்ட இரண்டு தொகுப்புகளில் (27, 189) என்பது சரியான எண்கள் ஆகும்.

💠ஒரு பொருளின் விற்பனை வரியானது 3*1/2% லிருந்து 3*1/3% ஆக குறைகிறது. ஒருவர் ஒரு பொருளினை ரூ. 8400 க்கு வாங்குகிறார் எனில் ஆரம்ப மற்றும் குறைக்கபட்ட விற்பனை வரிக்கு இடைப்பட்ட வித்தியாசத்தினைக் காண்க.

விடை : ரூ. 14
👉விளக்கம் :
தேவையான வித்தியாசம் = (8400 ல் 3*1/2%) – (8400 ல் 3*1/3%)
= 8400 ல் [ (7/2) – (10/3) ]%
= 8400 ல் [ (21 – 20)/6 ]%
= 8400 ல் 1/6%
= ரூ.[ 8400 * (1/6) * (1/100) ] = ரூ. 14

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.